.Join Telegramமே மாதம் சம்பளம் வழங்க வேண்டும்' என, பகுதி நேர ஆசிரியர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:
அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட எட்டு பாடங்களில், பகுதி நேர ஆசிரியர்களாக, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். மாதம் தொகுப்பூதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மே மாதம் கோடை விடுமுறை காலத்திற்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்த ஆண்டு கருணையுடன், மே மாத சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment