சென்னை: தமிழகத்தில் புதிதாக 4,000 மருத்துவப் பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Join Telegram
கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான புதிய செவிலிய குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டி வைத்தார். இதனைத் தொடர்ந்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், நோயாளிகளிடம் மருத்துவமனை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து கபிஸ்தலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, ரத்த அழுத்தம் உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர்.
கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது குறித்து, அப்பகுதி மக்கள் தைரியத்துடன் போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளிக்கும் மனநிலையை பெற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில், இது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
மேலும், சுகாதாரத் துறையில் 4,308 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, துறை வாரியாக பணி நியமனங்கள் முடிவு பெற்று, அவர்கள் பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளார்கள். இதேபோல் 1021 மருத்துவர் பணிக்கும், 900 மருந்தாளுநர் பணிக்கும், இன்னும் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வு பெற்றவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். நிகழாண்டு நிதி நிலை அறிக்கையில் கூறியது போல் புதிதாக 4,000 மருத்துவ பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்களும் உள்ளன. விரைவில் கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் ஆகியவைகள் புதிய துணை சுகாதார மாவட்டங்களாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment