சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 19ம் தேதி வரையில் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரியில் உள்ள உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ₹48, பதிவுக் கட்டணம் ₹2 ம் சேர்த்து ₹50 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் ₹2 மட்டும் செலுத்த வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்று, 94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 மாணவிகள் மாணவர்கள் 3,49,697 பேர் அடங்குவர். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 ஆகும்.
No comments:
Post a Comment