பிளஸ் 1 துணைத்தேர்வு தேர்வு நடைபெறும் தேதி : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/05/2023

பிளஸ் 1 துணைத்தேர்வு தேர்வு நடைபெறும் தேதி : அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


சென்னை: ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை பிளஸ் 1 துனைத்தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து துணை தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளனர். 

 Join Telegram

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று முதல் வருகிற 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

 

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது . அதன்படி, 19, 20, 21, 22, 23 ,24, 25, 26 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 12-ஆம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதைபோல ஜூன் 27 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு துணை நடைபெறும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை 11-ம் வகுப்பு துணை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459