இன்ஜி., முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்., 15ல் துவங்க உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/05/2023

இன்ஜி., முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்., 15ல் துவங்க உத்தரவு.

 'இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செப்., 15க்குள் முதலாம் ஆண்டு வகுப்புகளை துவங்க வேண்டும்' என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.


மாணவர் சேர்க்கை குறித்து, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் மாணவர் சேர்க்கை அனுமதியை, ஜூலை 31க்குள் வழங்க வேண்டும்.

செப்., 10க்குள் முதல் கட்ட மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். மாணவர்கள் தேர்வு செய்த இடங்களை ரத்து செய்ய, செப்., 11 கடைசி நாள்.

இறுதிக்கட்ட காலியிடங்களுக்கு, செப்., 15க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். செப்., 15ல் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை துவங்க வேண்டும். இந்த கால அட்டவணைப்படி, ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459