தமிழ்நாட்டின் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும் வரும் நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என்றும்
.Join Telegram அதைத்தொடர்ந்து \"மே 7 அல்லது 8 ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துகுடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment