10th,12th - ஐ.சி.எஸ்.இ., ரிசல்ட் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2023

10th,12th - ஐ.சி.எஸ்.இ., ரிசல்ட் வெளியீடு.

  ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.Join Telegram


இந்திய பள்ளி சான்றிதழ் படிப்பு கவுன்சிலான, ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், பிப்ரவரி முதல் மார்ச் வரை நடந்தன.


இதன் முடிவு கள், நேற்று மாலை வெளியிடப்பட்டன.


பிளஸ் 2வில், 98 ஆயிரம் பேரும்; 10ம் வகுப்பில், 2.37 லட்சம் பேரும் பங்கேற்றனர். அவர்களில், 10ம் வகுப்பில், 98.94 சதவீதம்; பிளஸ் 2வில், 96.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.


பிளஸ் 2வில் மாணவியர், 98.01 சதவீதம்; மாணவர்கள், 95.96 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில், மாணவியர் 99.21 சதவீதமும்; மாணவர்கள், 98.71 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பிளஸ் 2வில், மூன்று மாணவியர் உட்பட, ஐந்து பேர் முதலிடம் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில், மூன்று மாணவியர் உட்பட, ஒன்பது மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளதாக ஐ.சி.எஸ்.இ., கவுன்சில் அறிவித்துஉள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459