கடந்த ஆண்டு ஜூலையில், அரசு துறையில் 10 ஆயிரத்து, 117 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, நடந்தது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இந்த தேர்வில், 18 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு மார்ச், 24ல் வெளியானது.
தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான 'மெமோ' என்ற நினைவூட்டல் கடிதத்தை, இணையதளத்தில் தேர்வர்களின் பெயரில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.
பட்டியலில் பதிவெண் கொண்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை 'ஸ்கேன்' செய்து, 'இ - சேவை' மையம் வழியே, வரும், 13ம் தேதி முதல் மே, 5க்குள் பதிவேற்ற வேண்டும்.
No comments:
Post a Comment