இன்ஜினியரிங்கில் ஏழு பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு, பிளஸ் 2வில் கணித பாடம் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்தி, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, 'வேளாண் இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி, புட் இன்ஜினியரிங், லெதர் டெக்னாலஜி, பிரின்டிங் இன்ஜினியரிங், பார்மசூட்டிகல் இன்ஜினியரிங் மற்றும் டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி' ஆகிய பாடப் பிரிவுகளில், பி.இ., - பி.டெக்., படிக்க விரும்புவோர், பிளஸ் 2வில் கணிதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அதேபோல், 'பேஷன் டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், பேக்கேஜிங் டெக்னாலஜி' போன்றவற்றை படிக்க, கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. மேலும், கணினி அறிவியல், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேர, வேதியியல் படிப்பு கட்டாயம் என்பதும் அவசியமில்லை என, ஏ.ஐ.சி.டி.இ., கூறிஉள்ளது.
இந்த தளர்வுகளை அமல்படுத்தினால், இன்ஜினியரிங் படிப்பில், கணித பிரிவு மாணவர்கள் மட்டுமின்றி, பிளஸ் 2வில் மற்ற பாடப்பிரிவு எடுத்தவர்களும், அதிக அளவில் சேர முடியும்; வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என, கருதப்படுகிறது. இந்த தளர்வுகளை, கடந்த ஆண்டே அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., சுற்றறிக்கை அனுப்பியது; தமிழகத்தில் அமலாகவில்லை. வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையிலாவது அமலாகுமா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment