அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள்தான் தி.மு.க., ஆட்சிக்கு காரணம்' என, மனுவுடன் வந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை நெளிய வைத்தார் உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நேற்று 234 தொகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்களிடம் மனு கொடுத்து, தங்களுக்காக குரல் கொடுக்கும் படி கேட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பனிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனு கொடுத்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ., கடந்த தேர்தலில் 43 தொகுதிகளில் அ.தி.மு.க., தோல்விக்கு காரணம் நீங்கள் அளித்த தபால் ஓட்டுகள்தான்.
43 தொகுதிகளில் கூடுதலாக நாங்கள் பெற்றிருந்தால் அ.தி.மு.க., ஆட்சி அமைந்திருக்கும். இருந்தாலும் உங்கள் கோரிக்கைகள் குறித்து வரும் கூட்டத் தொடரில் பேசுவேன்'' என உறுதி அளித்தார்.
ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீதிராஜா, பொற்செல்வன், உசிலம்பட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாதன், கார்த்திகேயன், மனோகரன், அய்யங்காளை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment