பள்ளிக்கல்வி துறையில், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் அறிவித்துள்ள நிலையில், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் அறிவிக்காததால், அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் நிரந்தரமாக பணியாற்றும், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பில், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது.
இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை. இதனால், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment