தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கடந்தாண்டு கொரோனா வுக்கு பிந்தைய நிலை என்பதால், தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாத பல மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாறினர்.
மாற்றுச்சான்றிதழ் இல்லாத நிலையிலும், மாணவர் சேர்க்கைக்கு சலுகை வழங்கப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டில், அதுபோன்ற நிலை இல்லை என்பதால், வேறு பள்ளிக்கு மாறும் மாணவர்கள், தாங்கள் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் பள்ளியில் இருந்து, கட்டாயம் மாற்றுச்சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment