தமிழகம் முழுதும் உள்ள, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, தகுதியான உறுப்பினர்களை சேர்க்கும் வரை, தேர்தல் நடத்த தடை கோரி, ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
Join Telegramவழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''உறுப்பினர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.
கூட்டுறவு சங்கங்கள், தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, ''குறைகளை நிவர்த்தி செய்ய, அரசு, ஆறு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது; இதுகுறித்து, நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்,'' என்றார்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், உறுப்பினர் பட்டியலை திருத்த, ஆறு மாத கால அவகாசம் வழங்கினர். அதன்பின் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment