25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/04/2023

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

 தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25 %இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டில் எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு சேரஏப்ரல் 20 முதல் மே 18-ம் தேதி வரை ஆன்லைனில் (rte.tnschools.gov.in) விண்ணப்பிக்கலாம்.


எல்கேஜி-க்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருப்பதற்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


விண்ணப்பதாரர் ஆன்லைனில் எங்கிருந்தும் விண்ணப்பிக்கலாம்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலர், எஸ்எஸ்ஏ வட்டார வள மைய அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459