பிளஸ் 2 பொது தேர்வில், உயிரி தாவரவியல் பாடத்தில், தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் கேள்வி இருந்ததால் குழப்பம் அடைந்தனர்.
பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று உயிரியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடந்தது.
வினாத்தாளின் தன்மை குறித்து, முதுநிலை ஆசிரியர் சவுந்தரபாண்டியன் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வில், வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன.
தினசரி தேர்வுகள் மற்றும் பயிற்சி வினாக்களில் இடம் பெற்ற பெரும்பாலான கேள்விகள், பொது தேர்வில் இடம் பெற்றன.
இதன் காரணமாக, அனைத்து பாடங்களையும் படித்த மாணவர்களுக்கு, முழு மதிப்பெண் எடுப்பது மிகவும் எளிது. தேர்ச்சி விகிதமும் இந்த பாடத்தில் அதிகரிக்கும்.
இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், உயிரி தாவரவியலில் 2 மதிப்பெண் கேள்விகளுக்கான பிரிவில், ஒளிச்சேர்க்கை சார் செயலாக்க கதிர்வீச்சு என்றால் என்ன என்ற கேள்விக்கு, அதன் ஆங்கில வழி சுருக்கமான பி.ஏ.ஆர்., என்றால் என்ன என ஆங்கிலத்தில் கேள்வி இடம் பெற்றது.
தமிழ் வழி மாணவர்கள் கேள்வி என்னவென்றே புரியாமல், பதில் எழுதாமல் விட்டுள்ளனர்.
தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் இடம் பெற்ற கேள்விக்கு, 2 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment