'தொடக்க கல்விதுறையில், பதவி உயர்வுக்காக 17 ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து வகை நடுநிலைப் பள்ளிகளிலும் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதிலாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என, அரசாணை 2003 ஜூன் 27ல் வெளியானது.
இதன்படி 17 ஆண்டு களாக தொடக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க
வேண்டும் என 2007 முதல் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்தொடக்கல்வித்துறை தவிர பள்ளிக்கல்வித்துறையில் ஆதிதிராவிடர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத்துறை, மாநகராட்சி பள்ளிகளில் நியமிக்கப்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு 110 விதியின் கீழ் சட்டசபையில் நடப்பு கூட்டத் தொடரில் தமிழகம் முழுவதும் காத்திருக்கும் 17 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment