பி.காவியபிரியா, இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்: அறிவியல் தேர்வில் மொத்தம் 75 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஏழு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகள் யோசித்து எழுதும்படி புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன. மற்றபடி ஒருமதிப்பெண் கேள்விகளில் 12க்கு12, இரு மதிப்பெண் பிரிவில் 14க்கு 14 அப்படியே கிடைக்கும். இயற்பியல், வேதியியல் பகுதிகளில் அதிக கேள்விகள் வந்துள்ளன. நன்றாகபடிப்பவர்கள் பலர் 'சென்டம்' பெறலாம். சுமாராக படிக்கும் மாணவர்கள்கூட 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியும். ந.அல்பஷிகா, அரசு மேல் நிலைப்பள்ளி, திருப்புல்லாணி: பெரும்பாலான வினாக்கள் அரையாண்டு, மாதிரி தேர்வுகளில் படித்தவைவந்துள்ளன. ஏழு, நான்கு மதிப்பெண் கேள்விகளில் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டதால் 2வினாக்கள் கடினமாக இருந்தன. சென்டம் எடுப்பது சிரமம் தான். 100க்கு 90 மதிப்பெண்கள் கிடைக்கும்.
கணக்கீடு வினாக்கள் எளிதாக கேட்டிருந்தனர். 7மதிப்பெண் கேள்விகளில் ஒரு வினா பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்டுள்ளதால் பதிலளிக்க சிரமமாக இருந்தது.
100க்கு 100 மதிப்பெண் பெறுவது கடினம்.
கே.பபிதா, அறிவியல் ஆசிரியர், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு அறிவியல் பாட வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டுள்ளன. எளிமையாக உள்ளதால் சுமாராக படிப்பவர்கள் கூட செய்முறை தேர்வு 25 மதிப்பெண்களுடன் 100க்கு70க்குமேல் பெறலாம்.
ஏழு மதிப்பெண் கேள்விகளில் வினா எண் 35 புத்தகத்தின் உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் பல மாணவர்கள் சிரமப்பட்டுள்ளனர். இதே போல ஒன்று, நான்குமதிப்பெண் வினாக்களிலும் கேட்டுள்ளனர். இதனால் சென்டம் எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment