டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a,3,4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடத்தவுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமின்றி இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இவ்வாண்டு அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பு வரும் முன்னரே வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை அறிந்து கொள்வதுதான் நமது நோக்கமாகும்.விண்ணப்பிக்க தகுதியான மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்க்கவும்.
தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும்,அரசுத் துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். 01.04.2023 அன்று முதல் வகுப்பு தொடங்குகிறது. மாணவர்கள் TNPSC-யின் குரூப் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வயது மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப் படமும் கொண்டு வர வேண்டும். மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம். Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சிஐடியு அலுவலகக் கட்டிடம், 2வது தளம், நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.
பயிற்சியில் சேர விரும்புவோர், 90950 06640, 63698 74318, 97906 10961,94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் நம்பிக்கையோடு உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு 9444641712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment