School Morning Prayer Activities - 06.03.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/03/2023

School Morning Prayer Activities - 06.03.2023

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் எண்: 401
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்:
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

பழமொழி :
Courage and perseverance conquer all before them.
வீரமும் விடா முயற்சியும் அனைத்தையும் வெல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.


பொது அறிவு :

1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?

 பெட்ரோலியம்

 2. இந்தியா மயிலை தேசியப் பறவையாக அறிவித்த ஆண்டு எது? 

 1964


English words & meanings :

docile – submissive. adjective. The horses are docile. சாந்தமான/பணிவான. பெயரடை


ஆரோக்ய வாழ்வு :

ப்ரோக்கோலி நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் கொழுப்பை குறைக்கும். அலர்ஜியால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதயத்தை ஆரோக்கியமாக்கும் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை சரி செய்யும்.


நீதிக்கதை

மோதிரம்

விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர். அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது? என்றார். அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்! என்றார். அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்... என்றார்.

அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...! என்று அரசர் ஏற்றுக் கொண்டார். அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்! என்றார் தெனாலிராமன். ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார். அதை பெற்றுக்கொண்ட தெனாலிராமன், அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன். என்றார்.

மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டுவிட்டு, யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்... என்றார். அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.

அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...! என்றார். அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார். அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார்.

தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது. மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக்கூடப் பார்க்க முடியாது என்றார். அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார்.


இன்றைய செய்திகள் - 06.03. 2023

* கோவை வெள்ளியங்கிரி மலையில் 12 மணி நேரம் எரிந்த காட்டுத்தீ: மலை மீது ஏறுபவர்கள் இயற்கைச் சூழலை பாதுகாக்க பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று வனத்துறையினர் வேண்டுகோள்.

* மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் 4,922 வழக்குகள் கடந்த 6 வாரங்களில் தீர்க்கப்பட்டு, ரூ.5 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

* வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 10ம் தேதி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* தென் மாவட்டங்களில் 4 நாள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* இந்தியாவில் பரவுவது இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை வைரஸ் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்.

* மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

* “நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.

* மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

* உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிகளுக்கு துபாய் டென்னிஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் 7–ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ்.


Headlines

* A forest fire burned for 12 hours in Velliangiri Hill, Coimbatore: The forest department has requested mountain climbers to behave responsibly to protect the natural environment.

 * According to the Chennai Metropolitan Traffic Police, 4,922 cases of drunken driving have been settled in the last 6 weeks and fines of Rs 5 crore have been collected.

 * People's Welfare Minister M. Subrahmanian has said that a special fever medical camp will be held at 1000 places across Tamil Nadu on the 10th as many people are suffering from viral fever.

* Chances for 4-days rain in southern districts: Chennai Meteorological Center Information.

* Influenza A virus circulating in India - Indian Council of Medical Research information.

 * The Maharashtra government has announced that the licenses of six cough medicine manufacturing companies have been temporarily revoked.

*  “We are against war.  Those who see human rights as basic rights," said Iran's Foreign Minister Amiratullahian.

*  Delhi team won the women's premier league match against RCB by 60 runs.

* World number one Novak Djokovic's winning streak was ended by Russia's 7th seed Daniil Medvedev in the semi-finals of the Dubai Tennis Series.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459