RTE - தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகை : ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/03/2023

RTE - தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகை : ரூ.364 கோடி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசு

 

Plain-Feature-Image-83-16777619203x2

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் வருவாய்க்குக் குறைவாய் உள்ள மாணவர்களுக்காகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.364 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, தனியார்ப் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கின்றன. 2021-2022-ஆம் கல்வியாண்டில் தனியார்ப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தின் மூலம், 3 லட்சத்து 98 ஆயிரத்து 393 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459