NPS -ஐ எதிர்த்து போராடினால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


22/03/2023

NPS -ஐ எதிர்த்து போராடினால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

  'மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, எந்தவிதமான 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, சில ஊழியர் அமைப்புகள் சார்பில் நாடு முழுதும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஸ்டிரைக்கில் ஈடுபடுவதற்கு, ஊழியர்களுக்கு எந்தவிதமான சட்டப்பூர்வமான அனுமதியும் இல்லை. நீதிமன்றமும் இது தொடர்பாக ஏற்கனவே பல தீர்ப்புகளை அளித்துள்ளது.


எனவே போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த வகையான போராட்டத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஊழியர்களின் போராட்டம், விடுப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகள் உடனுக்குடன் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459