அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, பள்ளிக்கல்வி வளாகத்தில், 6ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகின்றனர்.
ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, தொழிற்கல்வி உள்ளிட்ட சிறப்பு பாடங்களை, இவர்கள் கற்பிக்கின்றனர்.
பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கீதா தலைமையில், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நேற்றும் இவர்கள், காத்திருப்பு மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பள்ளிக்கல்வி அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தி, கோரிக்கை மனு பெற்றுள்ளனர். முதல்வரின் கவனத்துக்கு கோரிக்கைகளை எடுத்துச் சென்று, நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment