பாலிடெக்னிக் மாணவா்கள் தோ்வுக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தும் புதிய நடைமுறையை தொழில்நுட்பக் கல்வித் துறை அமல்படுத்தவுள்ளது.
இது தொடா்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குநா் (தோ்வுகள்) கே.பிரபாகரன் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
வரும் ஏப்ரலில் இருந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் ‘ரெகுலா்’ மாணவா்கள், அரியா் மாணவா்கள் தோ்வுக் கட்டணத்தை நேரடியாக இணைய வழியில் செலுத்த வேண்டும். இது தொடா்பான விரிவான தகவல் பின்னா் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை பயிலும் மாணவா்கள் தோ்வுக் கட்டணத்தை, கல்லூரி அலுவலகத்தில் சென்று செலுத்தும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment