அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி இணையவழியில் விண்ணப்பம் வரவேற்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/03/2023

அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி இணையவழியில் விண்ணப்பம் வரவேற்பு

 தமிழ்நாடு வேளாண் பல்கலையில், டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஐ.பி.பி.எஸ்., ஆர்.ஆர்.பி., ஆகிய போட்டித்தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளில் சேர, இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


பயிற்சிகள், மாலை 5:30 முதல் 8:30 மணி வரை, ஆறு மாத கால பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. குறைந்தபட்சம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், https://tnau.ac.in/cecc/ என்ற இணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், திருத்தங்கள் ஏதும் செய்ய இயலாது.


பயிற்சி வகுப்புக்கான அழைப்பு கடிதம், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சேர்க்கையின் போது, அழைப்பு கடிதத்தை எடுத்து வர வேண்டும்.


பத்தாம் வகுப்பு மொத்த மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்யப்படும் தேர்வர்கள், பயிற்சி மையத்தில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப அழைக்கப்படுவார்கள்.


மேலும் விபரங்களுக்கு, 0422-6611242/6611442 என்ற போன் எண் வாயிலாகவும், cecctnau@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459