பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகளில், 'ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும், 6ம் தேதி துவங்கி, 20ல் முடிகிறது. இதற்கான செய்முறை தேர்வு, கடந்த வாரம் பள்ளிகளில் நடந்தன. மாணவர்களுக்கு இன்று முதல், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், விடுமுறை அறிவிக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏற்கனவே பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அரசாணைகளின்படி, மொழிப்பாடம், அறிவியல் செய்முறை தேர்வுகளில் விலக்கு, தேர்வு எழுத கூடுதல் ஒரு மணி நேர அவகாசம், சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகளை, உரிய ஆவணங்கள் மற்றும் விதிகளின்படி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment