ஏப்ரல் 1 முதல் ரூ.2000-க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/03/2023

ஏப்ரல் 1 முதல் ரூ.2000-க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

 

IMG_20230329_114314

யூபிஐ வாயிலாக 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு ஆன்லைன் மூலம் வணிக பரிமாற்றம் செய்தால் வரும் 1ம் தேதி முதல் 1.1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் பண பரிவத்தனைகளை அரசு ஊக்குவித்து வருகின்றது, அந்த வகையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ -ல் இணைத்து கொண்டனர் ,அதன் மூலம் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் ஆன்லைன் பணப்  பரிவர்த்தனை செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை மாற்றி கொள்கின்றனர்.


இந்த நிலையில், தற்போது நேஷனல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்கிற தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.2000க்கு மேலான யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1% கூடுதல் கட்டணம் வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது. சிறிய கடைகளில் 2000 ரூபாய்க்கு மேல் பரிமாற்றம் செய்தால் 1.1% , அரசு நிறுவனங்கள் தொடர்பான பண பரிமாற்றங்களுக்கு 1%, மியூச்சல் ஃபண்ட் , காப்பீடு, ரயில்வே ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு 1% என்ற அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்பொருள் அங்காடிக்கு 0.9%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%,எரிபொருளுக்கு 0.5%,என கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதுடன், இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459