Union Budget 2023 - முக்கிய அம்சங்கள் - Live Updates - ஆசிரியர் மலர்

Latest

 




 


01/02/2023

Union Budget 2023 - முக்கிய அம்சங்கள் - Live Updates

images(223)

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 5வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துவருகிறார்.

மத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.. Live Updates

12:27 Feb 1

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது
 
புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு.

12:19 Feb 1

தங்கம், வெள்ளி, வைரம் விலை உயரும்

இறால் உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும். 
6.5 கோடி பேர் வருமான வரி செலுத்தியிருக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:14 Feb 1

சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு.

சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிப்பு

12:13 Feb 1

 லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.

ரசாயன பொருள்களுக்கான வரி குறையும்.
சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு

12:11 Feb 1

 வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்

 வேலைவாய்ப்பு செய்திகள் 2023


12:09 Feb 1

பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம்

 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . *மத்திய பட்ஜெட் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை...*

*முக்கிய அம்சங்கள்...*

இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது, ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது

கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன

உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு

"நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்"

9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது

தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது

102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்

9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு

11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது

2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்

சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது

"9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது

ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் 
Union  budget full details: Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459