சென்னை: தமிழகத்தில் இன்று நடந்த குரூப் 2, 2ஏ தேர்வில் வினா, விடைத்தாள்கள் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குளறுபடி காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..JoinTelegramதமிழக அரசு துறைகளில் உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2 தேர்வு, முதன்மை தேர்வு இன்று(2023 பிப்.,25) நடந்தது. தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9:30 மணிக்கு துவங்கவிருந்த தேர்வில், தமிழ் மொழி தகுதி தாளுக்கான தேர்வு தாமதமானது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தது. இதனால், உரிய நேரத்திற்கு தேர்வு துவங்கப்படவில்லை. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு தேர்வு துவங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சில மையங்களில் பதிவு எண்களை மாறியதை சரி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.இதையடுத்து, அந்த மையங்களில்,
தேர்வு துவங்குவது எவ்வளவு நேரம் தாமதமானதோ அவ்வளவு நேரம் கூடுதலாக வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.பதிவெண் மாறியதால், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வு அறையில் இருந்து வெளியே வந்த மாணவர்கள், மொபைல் போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு விடைகளை கேட்டது மற்றும் புத்தகங்களை பார்த்து விடைகளை தெரிந்து கொண்டது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தேர்வுக்கான வினாத்தாளும் வெளியாகி உள்ளதாக தெரிகிறது. வினாத்தாளை பார்த்த தேர்வர்கள், விடைகளை பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.மதுரையில் மதுரை பல்கலையில் நடந்த குரூப் 2 தேர்வில், கிடைத்த அரைமணி நேரத்தில், வெளியே வந்து புத்தகத்தை எடுத்தும், மொபைல் மூலமாகவும் விடைகளை பார்த்து தேர்வு எழுதியதாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்கள் தரப்பில் கூறும்போது, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய குழப்பம் நடந்துள்ளது. அப்படியே தேர்வு நடத்துவது கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கூடுதல் நேரம் வழங்கினாலும் ஏதுவும் மாறாது. தேர்வை ரத்து செய்து வேறு நாளில் நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர்.
பாமக., தலைவர் அன்புமணி,சீமான் ஆகியோர் குரூப் 2 தேர்வை ரத்து செய்து வேறொரு நாளில் நடத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்வு நேரம் மாற்றம்
மதியம் 2 மணிக்கு துவங்க இருந்த இந்த தேர்வு, அதற்கு பதிலாக 2:30 மணிக்கு துவங்கி 5:30 மணிக்கு நிறைவு பெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment