அரசு பள்ளி மாணவர்கள் மோதல் இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/02/2023

அரசு பள்ளி மாணவர்கள் மோதல் இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

 புதுப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டு உள்ளனர்.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இரு பிரிவினரகளாக கடந்த 7 நாட்களுக்கு முன்பு மோதிக்கொண்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.


தொடர்ந்து, மாணவர்கள் இரு பிரிவினராக மோதிகொள்ள துாண்டுதலில் ஈடுபட்டதாக, முன்னாள் தலைமை ஆசிரியர் காமராஜ், புவியியல் ஆசிரியர் வீரவேல், வரலாறு ஆசிரியர் சீனிவாசன் ஆகிய மூவர் மீது புகார் அளிக்கப் பட்டது.


இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.


இதற்கிடையில் பள்ளி கல்வி இணை இயக்குநர் உத்தரவின் பேரில், ஆசிரியர்கள் வீரவேல், சீனிவாசன் ஆகிய இருவரை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459