உயர்கிறது வீடு, வாகன கடனுக்கான வட்டி.. ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/02/2023

உயர்கிறது வீடு, வாகன கடனுக்கான வட்டி.. ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு!

 

Copy-of-2-frame-11-16758356563x2

பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது  நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கள்கிழமை தொடங்கியது.


வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த வட்டி உயர்வால்  தனி நபர், வீடு , வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


பிப்ரவரி 1 அன்று மத்திய அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மத்திய ரிசர்வ் வங்கி தனது  நாணயக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) மூன்று நாள் கூட்டத்தை பிப்ரவரி 6- திங்கள்கிழமை தொடங்கியது. மூன்றாம்  நாளான இன்று கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதன்படி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்த்தப்பட்டுள்ளது.  அதன்படி தற்போது  6. 5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459