தற்போது அனைவரும் பயன்படுத்தும் செல்போன்கள் தொடங்கி ஆட்டோ மொபைல் கார், ஊடகங்கள், விண்வெளித்துறை என அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவை வளர்ந்து வரும் துறைகளாக கருதப்படுகின்றன. எதிர் காலத்தில் பலருக்கும் வேலை வாய்ப்புடன் நல்ல ஊதியத்தையும் தரும் துறைகளாக இவை பார்க்கப்படுகின்றன, இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட பொறியில் கல்லுரிகள் இவ்வகை படிப்புகள் தொடங்க அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
கணினி, அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு அதிக மோகம் இருந்து வரும் நிலையில் அதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக செயற்கை நுண்ணறிவும் இணைய பாதுகாப்பும் இருப்பதால் இவ்வகை படிப்புகளை படிக்க மாணவர்களும் படிப்புகளை தொடங்க கல்லுரிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இத்தகைய துறைகளில் திறமையான பொறியாளர்களை உருவாக்க கல்லுரிகளில் உட்கட்டமைப்பு வசதி, பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தரம் ஆகியவை முக்கியம் என்கின்ற கருது நிலவுகிறது.
முதல் தலைமுறை தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய 60 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது தற்போது நடைமுறையில் உள்ள 4ம் தலைமுறை தொழில்நுட்பமோ 5 ஆண்டுகளில் உச்சத்தையெடுக்கிறது என தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
மாறிக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பங்களை உடனுக்குடன் கற்றுக்கொள்ளும் மாணவர்களே தொழில் துறைக்கு தேவை என்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.கொரோனா பொதுமுடக்க காலத்தில் பெருபான்மையான மக்கள் டிஜிட்டல் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் சைபர் செக்யூரிட்டியின் தேவை 400 மடங்கு அதிகரித்துள்ளது. இநோருபுரம் ஆப்பிள் போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்கும் நிலையில் நம்மிடம் அதற்கேற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாராக இருப்பது அவசியம். அதற்கான வெற்றிடத்தை அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு மாணவர்கள் நிரப்புவார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment