ரூ.1155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.1,155 கோடி மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற உள்ளன..JoinTelegram
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 18 துறைகளைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, மறைந்த முன்னாள் முத்தலைமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கனவுத்திட்டமான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. 2023 – 24 ஆம் ஆண்டில் ரூ.1155 கோடி மதிப்பில் 2544 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment