ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை, நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கவிருப்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு, ஜேஇஇ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள, மாணவர்கள் ஜேஇஇ விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த நுழைவுச் சீட்டு இல்லாமல், யார் ஒருவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நுழைவுச் சீட்டில், மாணவரின் அனைத்து விவரங்களும், தேர்வுக் கூட விவரங்களும், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
jeemain.nta.nic.in இணையதளத்துக்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் ஜேஇஇ முதன்மை 2023 அமர்வு 1 அட்மிட் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஜேஇஇ மெயின் விண்ணப்ப எண்ணையும் பிறந்த தேதியையும் உள்ளிடவும்.
சப்மிட் கொடுத்து ஜேஇஇ மெயின் 2023 அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யவும்.
அதனை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். நுழைவுத் தேர்வெழுதச் செல்லும் போது கையில் வைத்திருக்கவும்.
மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.
இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
நிகழாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஜனவரி 24 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment