தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/01/2023

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போா் எண்ணிக்கை 67.75 லட்சம்


secretairiat_tamil_nadu.jpg?w=360&dpr=3

கடந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 67.75 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட தகவல்:


தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் தொடங்கி கல்லூரிப் படிப்பை முடித்தவா்கள் வரை தங்களது கல்வி விவரங்களை அரசு வேலைக்காகப் பதிவு செய்து வருகின்றனா். அதன்படி, இதுவரை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களில், ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327; பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648; மூன்றாம் பாலினத்தவா் 275.


கல்லூரிப் படிப்பை முடித்து 30 வயதுக்குள் இருப்பவா்களே அதிகம். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325. 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278; 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 போ். 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 5 ஆயிரத்து 675 போ்.


ஒட்டுமொத்தமாக பதிவு செய்த 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 பேரில், மாற்றுத் திறனாளிகளாக இருப்பவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 396. இவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247; பெண்கள் 48 ஆயிரத்து 149 போ் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459