இளைஞர்களுக்கு உதவித்தொகை
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் வாயிலாக உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள்,
https://tnvelaivaaippu.gov.in,
https://employmentexchange.tn.gov.in
ஆகிய இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். இதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், பிப்.28ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுஉள்ளார்.
No comments:
Post a Comment