பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு? மறுப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/01/2023

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 11,705 காலியிடங்கள் அறிவிப்பு? மறுப்பு

 

bsnl.JPG?w=360&dpr=3

பாரத் சஞ்சார் நிகாம் எனப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11,705 இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால், அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படவில்லை என பிஎஸ்என்எல் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


இணையதளங்களில் வைராகும் வேலைவாய்ப்பு குறித்த தகவல் இதோ உங்களின் கவனத்திற்காக: 


ADVERTISEMENT

பணி: இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர்(Junior Telecom Officers)


காலியிடங்கள்: 11,705


தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 


வயதுவரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை: https://www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையதளங்களில் மேற்கண்ட காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எச்சரிக்கை: இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளின் சமீபத்தில் வெளியிட்டுள்ள  அறிவிப்பில், மேற்கண்டவாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த தகவல்கள் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆட்சேர்ப்பு ஆணையத்தால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும், போலியான அறிவிப்புகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர். 


பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இயக்குநர்(எச்ஆர்) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Director(HR)

தகுதி: மனிதவள மேலாண்மையில் எம்பிஏ, பிஜிடிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

Smt Kimbuong Kipgen

Secretary,

Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan,

BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2023


அதிகாரப்பூர்வ அறிப்பை பார்க்க கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459