'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.
அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் குரூப் - 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு முடிவுகளின்படி, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை, வரும் 16ம் தேதி வரை, இ - சேவை மையங்கள் வழியாக, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையங்களும், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்; கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, விண்ணப்பதாரர்கள் இதை பயன்படுத்தி, தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான உதவிக்கு, அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின், 1800 - 425 2911 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment