பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், 2023 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராதவர்கள் அனைவரும், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவும், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம்.
வரும் 26ம் தேதி முதல் ஜன., 3 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, அரசு தேர்வுகள் இயக்குனரக மாவட்ட சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், ஜன., 5 முதல் 7 வரை சேவை மையத்துக்கு சென்று, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 1, பிளஸ் 2 - 1,000; 10ம் வகுப்புக்கு 500 ரூபாய் என, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்
No comments:
Post a Comment