அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டி, இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகளை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் ்என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் 2022- 23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் வெற்றி பெறும் பரிசு வழங்கும் விழாவானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 12ம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. வெற்று பெறும் மாணவ மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மாநில அளவிலான இந்த போட்டிகள் வகுப்பு வாரியாக 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதன்படி,
6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதுரையிலும், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கோயம்புத்தூரிலும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருவள்ளூரில் நுண்கலை, நாடகம் மற்றும் மொழித்திறன் போட்டிகள், காஞ்சிபுரத்தில் இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, இசை சங்கமம் உள்ளிட்ட போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடன போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 லட்ச ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment