மாணவர்களிடையே புதிய சிந்தனைகளை உருவாக்க திட்டம்: டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/12/2022

மாணவர்களிடையே புதிய சிந்தனைகளை உருவாக்க திட்டம்: டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

 

914631

குஜராத் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சிந்தனையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க உதவும் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.


இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புடைமைப் பிரிவுத் தலைவர் பாலாஜி கணபதி கூறியதாவது: மாணவர்களின் கல்விக்கு மதிப்புசேர்க்கும் வகையிலும் டிஜிட்டல் திறன்களை வளர்க்கும் வகையிலும். ‘எனது ஒளிமயமான எதிர்காலத்துக்குச் செல்லுதல்’ என்ற தலைப்பின் கீழ் மாணவர்களிடையே புதியசிந்தனைகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதை குஜராத் முழுவதும் உள்ள 14,486 பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம்.


இத்திட்டத்தின் கீழ் கணிதம், அறிவியல், கல்வியறிவு, சமூக ஆய்வுகள் மற்றும் கலை, இலக்கியம் போன்ற முக்கிய பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஒருங்கிணைக்கும், உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களை மேம்படுத்துவதற்கான முன் முயற்சியாகும்.இத்திட்டம் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.


மேலும் மாணவர்களிடையே உலகளாவிய சிந்தனையை உருவாக்கும் முயற்சி. சமூகத்தில் உள்ள முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வைஉருவாக்குதல் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக மாணவர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மேலும், மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புதிய டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு தயார்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேலும் அதிகரிக்கும். எதிர்காலத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459