2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு? - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/12/2022

2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு?

 2023 - 24ம் நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரியின் உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தயாரிக்கும் பணியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தனிநபருக்கான வருமான வரி உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாய் உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 8 ஆண்டுகளாக தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மற்றும் வரி சலுகையில் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. பழையபடி நடைமுறை அல்லது 2020ம் ஆண்டு கொண்டுவந்த புதிய வழி நடைமுறையை பின்பற்றி வரி செலுத்த ஒன்றிய அரசு கூறினாலும் புதிய வரி நடைமுறையை 10 முதல் 12 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த இரு வரி நடைமுறையும் ஒரே மாதிரியாக இருந்தால் வரி செலுத்துவோரின் சுமை குறையும் என்றும் பலர் முதலீடுகளில் ஆர்வம் காட்ட முடியும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459