10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வில் 85% குறைவான தேர்ச்சி ஏன்? ஆசிரியர்களுடன் பள்ளி கல்வித்துறை ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/12/2022

10ம் வகுப்பு 2ம் பருவ தேர்வில் 85% குறைவான தேர்ச்சி ஏன்? ஆசிரியர்களுடன் பள்ளி கல்வித்துறை ஆலோசனை

 10 ஆம் வகுப்பு 2ம் பருவத்தேர் வில் 85%க்கும் குறைவான மதிப்பெண் மாணவர்கள் பெற என்ன காரணம் என் பது குறித்து ஆலோசிக்க, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர்களுடன் பள்ளிகல்வித் துறை இன்று ஆலோசனை நடத்துகிறது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல் முறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாணவர்கள் வருகை ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர்களுக்கு கொடுக் கப்படும் வீட்டுபாடம் உள் ளிட்டவை ஆய்வுகளுக்கு  உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில், உதவி கல்விஅலுவலர்கள் வாயிலாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் செயல்பாடுகள் வாரந்தோறும் வழங்கப்படும். சமீபத்தில் நடந்த இந்த ஆய்வு கூட் டத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பின் 2ம் பருவத் தேர்வு முடிவுகள் குறித்து

ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10ம் வகுப்பு 2ம் பருவத்தேர் வில் 85 சதவிகிதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகி தம் பெற்ற பாடப்பிரிவுக ளின் ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு இன்று மாலை 4 மணி அளவில் அம்மா மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற வுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள் ளும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 85 சதவீதத்திற்கும் மாணவர் கள் குறைவாக தேர்ச்சி பெற்றதற்கான காரணத் தையும் அதற்காக பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக் கைகளையும் இந்தகூட்டத் தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459