தஞ்சாவூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 11.11.2022 அன்று நடைபெற்ற அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , உதவித் திட்ட அலுவலர் , உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை முன்னறிப்பின்றி குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் நடத்தப்படும். அதன்படி , அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி வளாகத் தூய்மை , கழிவறை தூய்மை , மேற்கூரைத் தூய்மை , வகுப்பறைத் தூய்மை , குடிநீர் வசதி , பதிவேடுகள் பராமரிப்பு , EMIS பதிவுகள் , மாணவர்களின் தமிழ் / ஆங்கிலம் வாசிப்புத்திறன் , கணித அடிப்படை செயல்பாடுகள் , எண்ணும் எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள் , கற்றல் விளைவுகள் , பாடக்குறிப்பேடு மற்றும் பிற கல்வி இணை செயல்பாடுகள் , குறைதீர் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் தங்கள் பள்ளிக்குட்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் விவரங்கள் குறித்து குழு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் இச்செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழு ஆய்வு நடைபெறும் நாளன்று அந்தந்த வட்டார தலைமையிடம் அல்லது அருகில் உள்ள இடத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் கலந்துகொள்ளும் வகையில் மீளாய்வுக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment