சென்னை, நவ.4: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நிகழாண்டுக்கான இலவச நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் 412 மையங்களில் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் மேல்நிலைக் கல்வி (பிளஸ் 1, பிளஸ் 2) பயி லும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 412 பயிற்சி மையங்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது. நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கி ழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ் வழி மற் றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை அந்த மாவட் டங்களில் உள்ள மாணவர்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் பெற்றமதிப் பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 மாணவர்கள்), பிளஸ் 1 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படை யிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 மாண வர்கள்) தெரிவு செய்யப்பட வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment