முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக நியமனங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்திருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு பி.எட்., படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.
இந்த போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் உருவாக்கி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, பாடத்திட்ட மாற்றம் குறித்து, அடுத்த மாதம் தேர்வு வாரிய ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன
No comments:
Post a Comment