அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்...*
*1.) 28.10.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறைகளின் படி செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.*
*3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.*
*4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED பெற்றோர் ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்ய வேண்டும்.*
*5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (பயனர் பெயர் &கடவுச்சொல் )வருகை பதிவை புதுப்பிக்க வேண்டும்.*
*6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .*
*7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை நவம்பர் 1.11.2022 அன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.*
*8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED பெற்றோர்கள் செயலியில் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.*
*9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை update செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED- PARENTS APP-ல் உறுப்பினர்களின் பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS இல் உள்நுழைந்து SMC RECONSTRUCTION சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட வேண்டும்.*
*11.TNSED PARENTS APP ல் LOGIN ஆகவில்லை என்றால் பள்ளி UDISE நம்பர் உடன் வட்டார வள மையத்திற்கு மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*
*12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு (தலைவர், தலைமை ஆசிரியர்) மேம்படுத்தப்பட்டால் பயனர் பெயர் இல்லை.*
*13. மேற்கண்ட விவரங்களுடன் சரி பார்த்திட அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*
*14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 3:00 முதல் 4:30 மணி வரை*
No comments:
Post a Comment