*அடடா இவ்வளவு அற்புதங்களா..!*
*அருகம்புல் சாற்றில்...*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.
இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும்.
குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும்.
அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும்.
இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக் கூடியது.
பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால்
உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின்
தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
*உடல் வெப்பத்தை அகற்றும்,*
*சிறுநீர் பெருக்கும்,*
*குடல் புண்களை ஆற்றும்,*
*இரத்தை தூய்மையாக்கும்.*
*உடலை பலப்படுத்தும்,*
*கண் பார்வை தெளிவுபெறும்.*
உடல் இளைக்க வேண்டுமா?
அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால்
உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.
ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும்.
ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.
அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து
தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு
அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
அருகம்புல் இயற்கையிலேயே குளிர்ச்சித்தன்மை கொண்டது என்பதால்
உடல் உஷ்ணம் இருப்பவர்கள் கோடையின் உஷ்ணத்திலிருந்தும் தப்பிக்க
தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து குளிர்ச்சியாக இருக்கலாம்.
இவை உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்காது என்பதோடு
உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது.
உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவுமே அண்டாது.
அருகம்புல் சாறு உடலில் இருக்கும் பித்தத்தின் அளவை சரிசெய்கிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பவர்கள்
அருகம்புல் சாறை நம்பி எடுக்கலாம்.
இது இரத்தக்குழாய்கள் தடிமனாகாமல் செய்கிறது.
குழாய்கள் சுருக்கமடைவதையும் தடுக்கிறது.
இதனால் இரத்த ஓட்டம் தடையின்றி சீராக செல்ல உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் குறை இரத்த அழுத்தம் இரண்டுமே சரிசெய்யப்படுகிறது.
அருகம்புல்லில் வைட்டமின் சத்துகளும், தாதுசத்துகளும் நிறைந்திருக்கின்றன என்பதோடு
நீரிழிவு நோயாளிகள் தினமும் இதை எடுத்துகொள்வதன் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்.
கட்டுப்படாத நீரிழிவால்
கால் மற்றும் பாதங்கள் எரிச்சல், உடல் எரிச்சல், சோர்வு, கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
அதை குணமாக்கும் வல்லமை ஒரு டம்ளர் அருகம்புல் சாறுக்கு உண்டு.
இதை பயன்படுத்திய சில நாள்களில் உடல் பிரச்சனைகள் குறைவதை உணர்வீர்கள்.
நோயாளிகள் மட்டுமல்ல
உடல் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் இதை குடிக்கலாம்.
மலச்சிக்கல் தீர்க்கும் மருந்தாகவும்,
சிறுநீர் பெருக்கியாகவும் இவை செயல்படும்.
பெண்கள் மாதவிடாய் மற்றும் இது குறித்த குறைபாடுகளிலிருந்து நிவாரணம் பெறவும்,
வளரும் பிள்ளைகள் உடலுக்கு வேண்டிய சத்தை பெறவும் இதை குடிக்கலாம்.
பல ஆய்வுகளிலும் அருகம்புல்லின் நன்மைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
என்றும் நலத்தை மேம்படுத்த முயற்சிக்கும்
உங்களுக்கு என் அன்பின் நன்றி.
No comments:
Post a Comment