PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/09/2022

PGTRB தேர்வர்கள் 26.09.2022-க்குள் withheld நீக்கம் செய்ய சான்றிதழ்களை சமர்பிக்க TRB உத்தரவு.

 

IMG_20220922_223545

2020-2021ஆம் ஆண்டுமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை . 1 / கணினிப் பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) எண் .01 / 2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 12.02.2022 முதல் 20.022022 வரை கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Test ) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று இவ்வாரியத்தால் வெளியிடப்பட்டன. மேலும் இதனைத் தொடர்ந்து 0209.2022 முதல் 04.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணி நாடுநர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


இதனைத் தொடர்ந்து அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலும் இனசுழற்சி அடிப்படையிலும் History , Economics , Geography , Mathematics , Physics , Chemistry , Botany , Zoology , Computer Science , Commerce , Physical Education , English , Tamil , Home Science and Political Science ஆகிய பாடங்களுக்கு தற்காலிகத் தெரிவுப் பட்டியல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன . அவ்வாறு வெளியிடப்பட்ட 3016 தேர்வர்களில் சில தெரிவர்கள் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு சில சான்றிதழ்களை சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காததால் 319 தெரிவர்கள் withheld ல் வைக்கப்பட்டுள்ளனர். 

அவ்வாறு withheld- ல் வைக்கப்பட்டுள்ள தெரிவர்களுக்கு 17.09.2022 நாளிட்ட பத்திரிகைச் செய்தி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்காத சான்றிதழ்களை 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய நாட்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் 248 தெரிவர்கள் உரிய சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமர்ப்பித்துள்ளதால் அவர்களின் withheld நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை சமர்ப்பிக்காத தெரிவர்கள் தங்களது உரிய சான்றிதழ்களை 26.09.2022 - க்குள் சமர்ப்பிக்கும்பட்சத்தில் இத்தெரிவர்களின் withheld நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


withheld List - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459