2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.
மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.
அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.
JEE - முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது.
No comments:
Post a Comment