தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு சதவீதம் தெரியுமா?: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/09/2022

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு சதவீதம் தெரியுமா?: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

 தமிழ்நாட்டில் 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


நீட் எழுதிய விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459